யாழ்ப்பாணம் சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தம்பிரெட்ணம் இராசமணி அவர்கள் நேற்று (11.08.2021) புதன்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான துரைராசா செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும் காலஞ்சென்றவரான தம்பிரெட்ணம் அவர்களின் அன்பு மனைவியும், புஸ்பலதா (யாழ்ப்பாணம்), புஸ்பராஜ் (ஜேர்மனி), ரவிசந்திரகுமார் (கனடா), துரைராஜ் (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும் காலஞ்சென்ற ஜெகநாதன், மற்றும் தமிழ் செல்வி (ஜேர்மனி), சுகந்தி (கனடா), வையந்தி (கனடா) ஆகியோரின் மாமியாரும், காலஞ்சென்ற பரமேஸ்வரி, சண்முகராசா, மகேஸ்வரி, குலசேகரம் மற்றும் சுந்தரலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும், காலஞ்சென்ற அனுசீலன் மற்றும் துஷாந்தினி – பார்த்தீபன் (நூறா), அனுராஜ் – டிலக்ஷா (ஜேர்மனி), கோபிராஜ் – ஜெய பிரிந்தா, தனுசியா – தவதீசன், டிலக்ஷா (ஜேர்மனி), கர்ஷன் (ஜேர்மனி), விதுஷா (ஜேர்மனி), சிரோமி (கனடா), சுஜீவன் (கனடா), செபானி (கனடா), நிசாந் (கனடா), அக்ஷா (கனடா) ஆகியோரின் பேர்த்தியும், நிறோஜன், மயூரன், யதுசிகன், கிஷான், யதுசிகா, சந்தோஷ், சமிரா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (12.08.2021) வியாழக்கிழமை காலை 8.00 மணியளவில் அவரது வீட்டில் நடைபெற்று முற்பகல் 10.00 மணியளவில் பூதவுடல் தகனக்கிரியைக்காக துண்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
புஸ்பலதா : 0777476266
| Obituary – Thambiratnam Rasamani