சபாரத்தினம் கந்தசாமி

0
Share

நீர்வேலி மேற்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சபாரத்தினம் கந்தசாமி கடந்த (26.08.2022) வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற சபாரத்தினம் – நல்லமுத்து தம்பதியரின் மகனும், கணபதிப்பிள்ளை – செல்வநாயகம் தம்பதியரின் அன்பு மருமகனும், இந்திராணியின் பாசமிகு கணவரும், புஸ்பாகரன் (லண்டன்), இந்திரகரன் (லண்டன்), மகிழினி (வைத்தியர், போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்), சாமினி (லண்டன்) ஆகியோரின் அருமைத் தந்தையும், துசித்தா (லண்டன்), மேகலா (லண்டன்), விபுலன் (வைத்தியர், போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்), றசீகரன் (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும், அஸ்வின், அஷ்னி, ஓவியா, பிரியன், தருன், பவிஷன், நிதிஷன், கயூரி, கீர்த்திக், ஆருஷா ஆகியோரின் அருமைப் பேரனும், பூபதியம்மா, காலஞ்சென்றவர்களான இலட்சுமி, தவராசா மற்றும் விஜயரட்ணம், புஸ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரனும், காலஞ்சென்ற குணரத்தினத்தின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (28.08.2022) ஞாயிற்றுக் கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக நீர்வேலி சீயாக்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :மனைவி, பிள்ளைகள்.

மாசுவன் சந்தி,
நீர்வேலி மேற்கு, நீர்வேலி.
0774781791

| Obituary – Sabaratnam Kandasamy