சண்முகராஜா நிர்மலன்

0
Share

இராமலிங்கம் வீதி, உடுவிலைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகராஜா நிர்மலன் (விற்பனை முகாமையாளர், Bitumix (PVT) Ltd.) நேற்று (15.01.2022) சனிக்கிழமை காலமானார்.

அன்னார் சண்முகராஜா-புஸ்பலில்லி தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற லயன் செல்வநாயகம் மற்றும் சந்திரராணி ஆகியோரின் அன்பு மருமகனும், அனுஷீலாவின் (ஆசிரியை, யா/ வேம்படி மகளிர் உயரதரப் பாடசாலை) அன்புக் கணவரும், சமீக் ஷிகா (மாணவி, தரம் 6 D யா/ வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை), சஷ்வத் (மாணவன், தரம் 3 B யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை) ஆகியோரின் அன்புத் தந்தையும், அருள்அழகன், கல்யாணி, சங்கீதா ஆகியோரின் அன்புச் சகோதரனும், ஆன்நிலாந்தி, புஜங்கன், தேவதர்சினி, ராகவேந்தன் ஆகியோரின் மைத்துனரும், மோதிலால் சுந்தரதாசன், ஆனியா ஆகியோரின் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (17.01.2022) திங்கட் கிழமை முற்பகல் 9.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக பூவோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் :
குடும்பத்தினர்.
077 378 6450
இராமலிங்கம் வீதி,
உடுவில்,
சுன்னாகம்.

| Obituary – Sanmugarajah Nirmalan