சந்திராவதி கனகரட்ணம்

0
Share

இல.14, நல்லூர்க் குறுக்கு வீதியைப் பிறப்பிடமாகவும் பலாங்கொடை, நல்லூர் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட காலஞ்சென்ற ந.கனகரட்ணம் (ஓவசீயர் – பாலங்கொடை) அவர்களின் ஆருயிர் துணைவி  திருமதி சந்திராவதி கனகரட்ணம் 28.04.2022 காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற தம்பு – கனகம்மா தம்பதியரின் புத்திரியும், பாலேந்திரா, அமராவதி, அச்சுதன் மற்றும் காலஞ்சென்றவர்களான யோகரட்ணம், ஜெயரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், சாரதா (லண்டன்), ரவீந்திரன் (யோகா – ஆசிரியர்), ஆகியோரின் பேரன்புமிக்க தாயும், ஆனந்தா (ஓய்வுபெற்ற பொருளிய லாளர்), பேராசிரியை சண்முகயோகினி  (ஆங்கில மொழிக்கற்பித்தல்துறை, யாழ். பல்கலைக்கழகம்) ஆகியோரின் அன்புக்குரிய மாமியாரும், கோகுலன் (லண்டன்), பவதாரணி (British Council), ரிஷிகேசன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள்  நாளை (01.05.2022) ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக முற்பகல் 10.00 மணியளில்  செம்மணி இந்து மயானத்துக்கு  எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:குடும்பத்தினர்

| Obituary – Santhiravathi Kanagaratnam