இராஜேஸ்வரி சிறீகுமரன் 

0
Share

மாவிட்டபுரம் சாயுடையைப் பிறப்பிடமாகவும், கனல் றோட், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் தற்காலிகமாக ஆலங்குழாய், சண்டிலிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இராஜேஸ்வரி சிறீகுமரன் நேற்று (21.04.2022) வியாழக்கிழமை காலமானார்.


அன்னார் காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் – தங்கமுத்து தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அழகையா – இராசம்மா தம்பதியரின் மருமகளும், சிறீகுமரன் அவர்களின் அன்பு மனைவியும், கஜானன், பார்கவின், ஹரிவிஷ்னு (யாழ். இந்து கல்லூரி உயர்தர மாணவன்) ஆகியோரின்  பாசமிகு தாயாரும், இராசலட்சுமி, இராசரத்தினம், தங்கமலர், இராமசந்திரன் (ஜேர்மன்), இராசரஞ்சனி (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும், பாலசுப்பிரமணியம், கோகிலாம்பாள், நடராசா, யசோதை, கலைச்செல்வன், சிவா, ஜெயா ஆகியேரிரன் அன்பு மைத்துனியும், துஷ்யந்தன், துசிக்குமார், பானுகா, பவிதா, புரந்தகன், சிறீதகன், கோபிராம், ஸ்ரீராம், அபிராம், ஆரணி, ஆரபி, கம்சாயினி, கஜந்தன், விக்னேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சித்தியும் ஆவார்.


அன்னாரின் இறுதிக்கிரியைகள் யாவும் சண்டிலிப்பாயில் உள்ள அவரது இல்லத்தில்  இன்று (22.04.2022) வெள்ளிக்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக அளவெட்டி கொட்டுப்னை இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.


தகவல்: கணவர், பிள்ளைகள்,
      சகோதரர்கள்
ஆலங்குழாய், சண்டிலிப்பாய்.
077 667 2670, 077 669 9697

| Obituary – Rajeshwary Srikumaran