கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும் கொக்கிலிப்பாய் வீதி இணுவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட மகாதேவன் மனோன்மணி நேற்று முன்தினம் (15.05.2022) ஞாயிற்றுக்கிழமை காலை இறைபதம் அடைந்துவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான மாணிக்கம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான சற்குணம் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சற்குணம் மகாதேவனின் அன்பு மனைவியும், ஜாமினி (லண்டன்), திருவரன் (கனடா), பாமினி (சுவிஸ்), சாந்தி (இணுவில்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், செல்வம் (லண்டன்), செஜநந்தினி (கனடா), கோபி (சுவிஸ்), இராசையா (இணுவில்) ஆகியோரின் அன்பு மாமியாரும், காருண்ஜன் (லண்டன்), அஸ்விந் (லண்டன்), சாகித்திகா (கனடா), ஆரணி (சுவிஸ்), கீர்த்தி (சுவிஸ்), அருட்குமரன் (லண்டன்), அருள்வதனி (இணுவில்) ஆகியோரின் அன்புப் பேர்த்தியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (18.05.2022) புதன்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் நண்பகல் 12.00 மணியளவில் தகனக் கிரியைக்காக காரைக்கால் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர்
கொக்கிலிப்பாய் வீதி,
இணுவில்.
021 224 3706
| Obituary – Mahathevan Manonmani