இரத்தினம் கண்மணி

0
Share

இராமலிங்கம் வீதி, திருநெல்வேலி கிழக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் கண்மணி நேற்று (12.07.2021) திங்கட்கிழமை பகல் காலமாகிவிட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி – நாகம்மா தம்பதியரின் சிரேஸ்ட புத்திரியும், நல்லையா – நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற இரத்தினத்தின் பாசமிகு மனைவியும், பாலகுமார் (ஓய்வுபெற்ற அதிபர்- யாழ். செங்குந்தா இந்துக் கல்லூரி), புஸ்பராணி (ஓய்வுபெற்ற ஆசிரியர் – திருநெல்வேலி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை), யோகராணி (லக்கி – தையல் போதனாசிரியர் பிரதேச செயலகம் – கோப்பாய்), விஜியராணி (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயும், செந்தில்மணி (ஓய்வுபெற்ற ஆசிரியர் – திருநெல்வேலி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை), இரத்தினராசா (ஓய்வுபெற்ற சுகாதார மேற்பார்வையாளர் யாழ். மாநகரசபை), சுந்தரராஜன் (கணக்காளர் வண்ணை வைத்தீஸ்வரன் கோவில்), குகன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியும், தாட்சாயினி (ஹற்றன் நசனல் வங்கி – யாழ்ப்பாணம்) சங்கீதா (அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம் நல்லூர்), கார்த்திகா (அஞ்சல் அதிபர், அஞ்சல் அலுவலகம் யாழ்ப்பாணம்), ஆரணி (அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிதுறைத் திணைக்களம் – வட மாகாணம்), துவாரகா (மாணவி – யாழ். பல்கலைக்கழகம்) சிந்து (மாணவி – யாழ். பல்கலைக்கழகம்), சுமித்தா (மாணவி – யாழ் இந்து மகளிர் கல்லூரி), சஞ்சித்தா, காயத்திரி, சரூன், விதுசா (கனடா), Dr. திவாகர், நவதர்ஷன் (ஆசிரியர் – மு.பாண்டியன் குளம் மகாவித்தியாலயம்), இராஜேஸ் கண்ணன் (வர்த்தகர்), மயூரன் (ஆசிரியர் – யாழ். மத்திய கல்லூரி), பார்தீபன் (ஆசிரியர் – கலவெட்டி திடல் நாகேஸ்வரா வித்தியாலயம், கிளிநொச்சி) ஆகியோரின் அன்புப் பேர்த்தியாரும், துவாரகன், தக்ஷயா, தானியா, ஆஷரா, ஆஷிகா, டிலக்சி, ஆதிரா, அபிஷேக், அக்ஷயன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (13.07.2021) செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.00 மணி யளவில் திருநெல்வேலி கிழக்கில் உள்ள “நல்லை ரெட்ணாபதியில்” நடைபெற்று தகனக் கிரியைக்காக திருநெல்வேலி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். (சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படும்)

தகவல்: இ.பாலகுமார் (ஓய்வுநிலை அதிபர்)

| Obituary – Ratnam Kanmani