அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும் நிரந்தர வசிப்பிடமாகவும் வவுனியாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட துரையர் சந்தணம் அவர்கள் நேற்று முந்தினம் (22.06.2021) செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற துரையர் பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னையா பொன்னி தம்பதிகளின் அன்பு மருமகனும், சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும், கௌரிபாலன் (கைத்தொழில் திணைக்களம் – வடமாகாணம்), செந்தில் பாலன் (நகர சபை – வவுனியா), தவபாலன் (கல்வி அமைச்சு வடமாகாணம்) ஆகியோ ரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற துரைராசா, குணராசா, துரைசிங்கம் (ஓய்வு பெற்ற புகையிரத உத்தியோகத்தர்) மற்றும் இராசலட்சுமி, நவரத்தினராணி, இராசமணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும், கஜந்தினி, யமுனாராணி (ஆசிரியை – விபுலானந்தா கல்லூரி – வவுனியா), சியாமினி (விலை மதிப்பீட்டுத் திணைக்களம் – யாழ்ப்பாணம்), ஆகியோரின் பாசமிகு மாமனாரும், காலஞ்சென்ற இராசதுரை, துரையம்மா, தவமணி, பரந்தாமன், மற்றும் பேபி, இரத்தினசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்தனரும் நியந்தரி, மகஸ்ரீதா, அதிஸ்டிதா, ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர்
077 665 7065
அச்சுவேலி தெற்கு,
அச்சுவேலி
| Obituary – Thuraiyar Sandhanam