சுப்பிரமணியம் சிவலோகநாதன்

0
Share

கோண்டாவிலை பிறப்பிடமாகவும் கட்டப்பிராயை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சிவலோகநாதன் அவர்கள் கடந்த (11.11.2021) வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற சுப்பிரமணியம் சுந்தரம் தம்பதியரின் மகனும், புஸ்பராணியின் அன்புக் கணவரும், தர்சிகா (தொழில்நுட்ப உத்தியோகத்தர் பிரதேச செயலகம் – கோப்பாய்) அவர்களின் அன்புத் தந்தையும், பிரசாந் (Quantity Surveyor, Yashi Holdings Pvt. Ltd) அவர்களின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற விநாசித்தம்பி சரஸ்வதி தம்பதியின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற பரங்கிரிநாதர், விசுவநாதன், திருஞானசம்பந்தர், சண்முகநாதன், அம்பிகாதேவி, காலஞ்சென்ற ரவீந்திரன் ஆயோரின் சகோதரனும், காலஞ் சென்ற நாகராசா, காலஞ்சென்ற ருக்மணிதேவி, தர்மரத்தினம், புவனேஸ்வரன் ஆகியோரின் மைத்துனரும், உதயமாலினி, சந்திரகுமார், சசிகுமார், சாந்த குமார், பவனிதா, ஆதவன், தினேஷ், நிருத்திகா, கவிதா, கயல்விழி, தனலக் ஷன், கிசானி, ப்ரித்தி, ரிஷி, நவீன் ஆகியோரின் மாமாரும், உஷாங்கினி, நிஷாலினி, வினோதினி, தருணி ஆகியோர் அன்னாரின் பெறாமக்களும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (14.11.2021) ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் முற்பகல் 10.30 மணியளவில் தகனக்கிரியைக்காக காரைக்கால் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்.

| Obituary – Subramaniyam Sivaloganathan