நீக்கிலாப்பிள்ளை அன்ரனி

0
Share

மண்டைதீவு 3ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் 39/2 கதீற்றல் வீதி யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நீக்கிலாப்பிள்ளை அன்ரனி அவர்கள் நேற்று (05.04.2022) செவ்வாய்க்கிழமை இறைபதம் எய்தினார்.


அன்னார் காலஞ்சென்ற திரு.திருமதி நீக்கிலாப்பிள்ளை மேரிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி செபஸ்ரி வரவணிக்கம் தம்பதியரின் அன்பு மருமகனும், றெஜீனாவின் அன்புக் கணவரும், டயானா (ஆசிரியர் மண்டைதீவு றோமன் கத்தோலிக்க பாடசாலை), ஆன்சோபனா (டெனா-முன்னாள் ஆசிரியர் – யா/ திருக்குடும்பக்கன்னியர் மடம் தேசிய பாடசாலை) (லண்டன்), தீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், மரியதாஸ், அற்றன்ஸ், சூசைதாஸ் காலஞ்சென்றவர்களான மேரி கிறேஸ், கிறேஸ் பத்திமா, சகாயதேவி ஆகியோரின் அன்புச் சகோதரனும், அன்ரன்-ஜெயராஜ் (ஆசிரியர்-யாழ் நல்லூர் சென்.பெனடிற் றோ.க. வித்தியாலயம்), எட்வின் சந்திரராஜா (லண்டன்), றஞ்சிதா ஆகியோரின் அன்பு மாமாவும், அக்ஷயன், கஷோன், அரோன், திசான் ஆகியோரின் அன்புப் பேரனும், காலஞ்சென்றவர்களான அந்தோனிமுத்து தேவராஜா (அதிபர்), பெர்னபேத்தம்மா, செலஸ்ரீன்பிள்ளை, பேணாட், மற்றும் சிப்பிரியான் (சுவீடன்), லில்லி மாக்றற், றீற்றம்மா, எட்மன்ஜெயசீலன், காலஞ்சென்ற யோசப் ஜெயபாலன் மற்றும் பத்மராணி, தேவா, சாந்தினி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.


அன்னாரின் பூதவுடல் 39 / 2 கதீற்றல் வீதி யாழ்ப்பாணத்திலுள்ள அவரது இல்லத்திலிருந்து நாளை (07.04.2022) வியாழக்கிழமை காலை 7.00 மணியளவில் எடுத்துச்செல்லப்பட்டு மண்டைதீவிலுள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3.00 மணிக்கு மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, புனித பேதுருவானவர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்
077 758 2593, 077 195 9206

| Obituary – Neekilapillai Antony