குப்பிழான் வடக்கினைப் பிறப்பிடமாகவும் விளையாட்டரங்கு வீதி, கல்வியங்காட்டினை வசிப்பிடமாகவும் தற்போது கனடாவில் வசித்து வந்தவருமாகிய கனகலிங்கம் செங்கமலம் (ராணி) நேற்றுமுன்தினம் (12.11.2021) வெள்ளிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – அருளம்மா தம்பதியரின் மூத்த மகளும், கந்தையா – மனோன்மணி தம்பதியரின் மருமகளும், சிவலிங்கம் – கணேசம்மா தம்பதியரின் பெறாமகளும், கனகலிங்கத்தின் (k.k) அன்பு மனைவியும், அமிர்தா, கவிதா, அஜந்தன், நிஷாந்தன் ஆகியோரின் தாயாரும், சந்திரசேகரம் (அப்பன்), காலஞ்சென்ற வர்களான சர்வேஸ்வரி (தேவி) ஞானசேகரம் மற்றும் பவிதா ஆகியோரின் சகோதரியும், கணேசலிங்கம் (ராஜன்), கிருஷ்ணகோபால், தர்மி, கவிதா ஆகியோரின் மாமியும், பரமலிங்கம், மகாலிங்கம் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (15.11.2021) திங்கட்கிழமை கனடாவில் நடைபெறும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர்.
| Obituary – Kanagalingam Senkamalam