இளையதம்பி சுப்பிரமணியம்

0
Share

சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும் சரசாலை மற்றும் ஊரெழு வடக்கு புன்னாலைக் கட்டுவனை வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி சுப்பிரமணியம் அவர்கள் நேற்று (11.12.2021) சனிக்கிழமை சிவபதமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான இளையதம்பி-சுந்தரம் தம்பதியரின் பாசமிகு புத்திர னும், சரசாலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான தம்பையா-கதிராசி தம்பதிய ரின் மருமகனும், குணபாக்கியத்தின் அன்புக் கணவரும், துர்க்காஜினி (அபிவிருத்தி உத்தியோகத்தர் – பிரதேச செயலகம்- தெல்லிப்பளை), சுதாகரன் (சாரதி- இலங்கை மின்சார சபை – சுன்னாகம்), கிரிசாந்த் (அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச சபை – நெடுந்தீவு) ஆகியோரின் பாசமிகு தந்தையும், சுபாகரன் (உதவிக் கல்விப்பணிப் பாளர், வலயக் கல்வி அலுவலகம் – யாழ்ப்பாணம்), சுதனிகா, லோஜினி (ஆசிரியை, வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், ஆத்மிகா, ஆராதனன், பிரசாங்கிகன், வர்ணிகா, அகரன் ஆகியோரின் அன்புப் பேரனும், பூமணி, சரஸ்வதி, இராசையா, தெய்வேந்திரம் ஆகியோரின் அன்புச் சகோதரனும், காலஞ் சென்றவர்களான தம்பிப்பிள்ளை, கந்தசாமி, குகதாசன், யோகேஸ்வரன் மற்றும் உருக்குமணி, ஜெயராணி, முத்துலிங்கம், சிவராஜா, சண்முகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரது இறுதிக்கிரியைகள் இன்று (12.12.2021) ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக் கிரியைக் காக சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:
குடும்பத்தினர்.
வைரவர் கோவில் அருகாமை,
ஊரெழு வடக்கு, சுன்னாகம்.
0777 103 768
076 7723 731, 077 820 0718

| ObituaryIlaiyathambi Subramaniyam