கரியாலை நாகபடுவான் குளக்கட்டி தான்தோன்றி ஐயனார் ஆலய நிர்வாகத் தலைவர்
மண்டைதீவைப் பூர்வீகமாகவும் நவக்கீரியைப் பிறப்பிடமாகவும், இல. 403, கரியாலை நாகப்படுவானை வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் சிவபரஞ்சோதி (செட்டி), (கரியாலை நாகபடுவான் குளக்கட்டி தான்தோன்றி ஐயனார் ஆலய நிர்வாகத் தலைவர்) அவர்கள் நேற்று முன்தினம்( 13.08.2021) வெள்ளிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற அழகரத்தினம் மற்றும் சுந்தரலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடராசா வேதவனம் தம்பதிகளின் அன்பு மருமகனும், யாழினியின் பாசமிகு கணவரும், சானுஜன், சாளினி, (கிளி{ கரியாலை நாகப்படுவான் இல 2 பாடசாலை மாணவர்கள்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், மணியம், கர்க்கண்டன், ராசன், பராசக்தி, காலஞ்சென்ற ரவி மற்றும் தவம், வதனம் ஆகியோரின் பாசமிகு சகோதரனும், பராசக்தி, சறோஜா, காலஞ்சென்ற சாந்தமலர் மற்றும் நந்தினி நளாஜினி ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (15.08.2021) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கரியாலை நாகபடுவான் கிழக்கு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்
0779915412
| Obituary – Alakaratnam Sivaparansothy