அமரர். மாணிக்கர் நாகையா

இணுவில் வட்டுவினியை பிறப்பிடமாகவும் தாவடி தெற்கு பத்தானை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கர் - நாகையா அவர்கள் நேற்று (27.02. 2021) சனிக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற மாணிக்கர் - ஆச்சியம்மா ஆகியோரின் அன்பு மகனும், இராசையா சோதிப்பிள்ளை ஆகியோரின் மருமகனும், தனலட்சுமி யின் பாசமிகு கணவரும், செந்தூர்ச் செல்வன் (அமரர்) மற்றும் பன்னீர்ச் செல்வி (யா{ஆனைக் கோட்டை உயரப்புலம் குணபால வித்தியாலயம்), தாமரைச்செல்வி (பிரான்ஸ்), மயூரச்செல்வன் ஆகியோரின் அன்புத் தந்தை யும், ஈஸ்வரி, சந்திரரூபன், சிவலோகநாதன் ஆகியோரின் மாமனாரும், காலஞ்சென்றவர்களான பரிமளம், வீரமுத்து, சிவஞானம் மற்றும் விசா லாட்சி, அன்னப்பிள்ளை மற்றும் காலஞ்சென்ற சொர்ணலிங்கம் ஆகி யோரின் அன்புச் சகோதரனும், அக்ஷயன், அக்ஷிகா, கதிர்குழலி, எழினி ஆகியோரின் பாசமிகு பேரனும் செல்வராணி, செல்வநாயகி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (28.02.2021) ஞாயிற்றுக்கிழமை தாவடியில் உள்ள அவரது இல்லத்தில் பகல் 1.00 மணிக்கு நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக தாவடி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப் படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தொடர்புகளுக்கு: 0778812329 / 0212052618
இணுவில், தாவடி,
யாழ்ப்பாணம்.

Post a Comment

0 Comments