அமரர். ஞானசெல்வம் கிறிஸ்ரி பிறேமகுமார்

உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே, என்னிடம் நம்பிக்கை கொள்பவர்
இறப்பினும் வாழ்வார்' (யோவான் - 11:25)


உசனை பிறப்பிடமாகவும் இல.78, குருசோ வீதி, யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட ஞானசெல்வம் கிறிஸ்ரி பிறேமகுமார் அவர்கள் 13.02.2021 சனிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான ஞானசெல்வம், பூமலர் ஆகியோரின் அன்பு மகனும், காலஞ்சென்ற பரராஜசிங்கம், பத்மராணி ஆகியோரின் அன்பு மருமகனும், கிறிஸ்ரினா தர்ஷினியின் (Accountant - St.John’s College, Jaffna) அன்புக் கணவரும், நோயல் றுக்ஷன் (London), ஜோயல் அனுக்ஷன் (HNB - Nelliady Branch) ஆகியோரின் பாசமிகு தந்தையும், டிம்பிள் திசாந்தி றுக்ஷன் (London), ஜொஆன் ஷாலினி அனுக்ஷன் (Interpreter-Danish Consulate) ஆகியோரின் அன்பு மாமனாரும், கெசியா மிஷேல் றுக்ஷன் அவர்களின் பாசமிகு பேரனும், பிறேமரஞ்சினி சோமநாதர், பிறேமகுமாரி புஷ்பராஜா (Retired Teacher) ஆகியோரின் பாசமிகு சகோதரனும், ஜெயந்தன் பரராஜசிங்கம் (Canada), சுகந்தன் பரராஜசிங்கம் (Canada), துஷ்யந்தன் பரராஜசிங்கம், கிறிஸ்ரி பரராஜசிங்கம் (Proprietor - Para Lights) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் White House Parlour, இல.181, பிரதான வீதி, யாழ்ப்பாணத்தில் 25.02.2021 வியாழக்கிழமை காலை 8.00 மணி தொடக்கம் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3.00 மணிக்கு நடைபெறும் நல்லடக்க வழிபாட்டின் பின்னர் அராலி அமெரிக்கன் சிலோன் மிஷன் திருச்சபையின் கல்லறைத்தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை அருட்பணியாளர்கள், உற்றார், உறவினர், நண்பர் கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர் (077 844 7849)

Post a Comment

0 Comments