அமரர். திருமதி. கிறிஸ்ரி மைக்கல் மகேந்திரன் கிறிஸ்ரபெல் ஜெயராணி (ராணி)


குருசோ வீதி, சுண்டிக்குளி, யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கிறிஸ்ரி மைக்கல் மகேந்திரன் கிறிஸ்ரபெல் ஜெயராணி (ராணி) நேற்று (21.02.2021) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

அன்னார் கந்தர்மடத்தைச்சேர்ந்த காலஞ்சென்ற அருளம்பலம் மிக்கேற்பிள்ளை (உபதேசியார்) நெடுந்தீவைச் சேர்ந்த காலஞ்சென்ற மரியம்மா தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்றவர்களான உரும்பிராயைச் சேர்ந்த அருளம்பலம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்றவர்களான ஞானம்மா, மேரிமாகிறேற், அருளானந்தம், மேரிதிரேசா (லில்லி), மரியமாசில்லா (மலர்), அலோசியஸ் யேசுதாசன், நவரட்ணம் (நவம்), ஜெயம் மற்றும் யோசப்பின் மேரிமெற் றில்டா (பேபி-கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும், கிறிஸ்ரி மைக்கல் மகேந்தி ரனின் (கனடா) அன்பு மனைவியும், பார்த்தீபதாசன் (சஞ்சி- மலேரியா தடை இயக்கம், மன்னார்), கிரிஜா கலையரசி, மயூரன் (பிரான்ஸ்), பிரவீனா (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், கில்டா, யூட்விமலேந்திரன், யூட் (பிரான்ஸ்) ஆகியோ ரின் அன்பு மாமியும், சுலக்ஷன் (மாணவன், முருங்கன் ம.வி), ஆன் ஹனுஸ்ரிகா (மாணவி, புனித ஜோன் பொஸ்கோ .வி), ஷயோன், ஜெனோஷ், ஜொகனாஷ், ஜோன் கமிஸின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (22.02.2021) திங்கட்கிழமை மு.ப 9.30 மணிக்கு யாழ். மரியன்னை பேராலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு கொஞ் சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.


இல 09, குருசோ வீதி,
சுண்டிக்குளி,
யபழ்ப்பாணம்.


Post a Comment

0 Comments