அமரர். கோவிந்தபிள்ளை சிவப்பிரகாசம்


அராலிவீதி, சங்கானையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமா கவும் கொண்ட கோவிந்த பிள்ளை சிவப்பிரகாசம், நேற்று (22.02.2021) திங்கட்கிழமை இறைபதம டைந்துவிட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கோவிந்த பிள்ளை நாகம்மாவின் அன்பு மகனும், காலஞ்சென்ற வர்களான முத்தையா ஆச்சிப்பிள்ளை தம்பதியரின் அருமை மருமகனும், பரமேஸ்வரியின் அன்புக் கணவரும், சசியின் (ஜேர்மனி) அன்புத் தந்தையும், செந்தில் அனந்தன் (ஜேர்மனி) அவர்களின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற கனகமணி, மற்றும் தேவராசா, ஆகியோரின் பாசமிகு சகோதரனும், அருள்ராம் (ஜேர்மனி), அனுரங்கன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் நேற்று (22.02.2021) திங்கட்கிழமை நடைபெற்றது. இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.


தகவல்: குடும்பத்தினர்


அராலி வீதி,

சங்கானை.

076 162 1212

Post a Comment

0 Comments